உலகின் மிகப்பெரிய பிசிஆர் ஆய்வுக்கூடம் அமைத்த டுபாய்!

உலகின் மிகப்பெரிய பிசிஆர் ஆய்வுக்கூடம் அமைத்த டுபாய்!

உலகின் மிகப் பெரிய பிசிஆர் பரிசோதனைக் கூடத்தை டுபாய் அதன் விமான நிலையத்தில் நிறுவியுள்ளது.

இரண்டாம் நுழைவாயிலுக்கு அண்மித்து 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாய்வுக்கூடம் திறக்கப்படவுள்ளது

உலக சுகாதார தாபனத்தின் புதிய தரத்திற்கமைய நவீன உபகரணங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வாய்வுக்கூடத்தில் ஒரு நாளைக்கு 100,000 இலட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்து சில மணி நேரங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய வசதிகள் காணப்படுகிறது என டுபாய் விமான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டுபாய் விமான நிலையம் அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து திறக்கப்படவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தது.

மேலும் குறித்த ஆய்வுகூடத்தில் நேர்எதிர் மற்றும் நேர்மறை அழுத்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவை நேரடியாக அரச அறிவிப்பு தளங்களுடன் தொடர்புபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாத்துறைக்கு அப்பால் உலகின் மிக பரப்பபரப்பான வர்த்தக போக்குவரத்து மையமாக காணப்படும் டுபாய் விமானநிலையத்தை பாதுகாப்பான போக்குவரத்துக்கு உகந்ததாகவும் சுகாதார வழிமுறைகளுக்கு உகந்ததாகவும் மாற்றியமைக்கபபடுவதே நோக்கம் என விமான நிலையத் தலைவர் ஷீக் அஹமட் பின் ஷஹீட் அல் மக்டோம் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image