53,000 பேருக்கு நிரந்த நியமனம் வழங்க அரசாங்கத்திடம் திட்டம் இல்லை

53,000 பேருக்கு நிரந்த நியமனம் வழங்க அரசாங்கத்திடம் திட்டம் இல்லை

53,000 பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரிகளுக்கு நிரந்த நியமனம் வழங்க அரசாங்கத்தினால், உரிய வேலைத்திட்டதை முன்வைக்க இதுவரையில் முடியாமல்போயுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அதன் பிரதிநிதி சித்தும் சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரிகள் 53,000 பேர் தொழிலுக்காக ஆட்சேர்க்கப்பட்டு தற்போது அவர்களின் பயிற்சி காலம் நிறைவடைந்துள்ளது. எனினும் அந்த நியமனங்களை நிரந்தரமாக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தினால் இதுவரை முடியாமல் போயுள்ளது.

2019ஆம் ஆண்டு ஆட்சேர்க்கப்பட்ட 14,000 பேரை பணிநிரந்தரம் ஆக்குவதற்கு ஒரு வருடமும் ஏழு மாதங்களும் இந்த அரசாங்கம் எடுத்தது. அவ்வாறு அவர்களை நிரந்தரமாக பணிக்கு அமர்த்திய போதிலும் 5மாத சேவை காலத்தை இல்லாமல் செய்து அவர்களை நிரந்தரமாக அரசு நடவடிக்கை எடுத்தது.

எனினும் தற்போது வரையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தரமாக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு உரிய பதவி உயர்வு, உரிய இடமாற்றம், உரிய வேதன உயர்தர என்பன தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லாத நிலையில்தான் அவர்கள் பயிலுனர் அபிவிருத்தி அதிகாரிகளாக சேவையாற்றுகின்றனர்.

இப்படியாக அபிவிருத்தி உத்தியோக்தர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில்தான், நாங்கள் பயிலுனர்களின் பிரச்சினைகளில் தலையீடு செய்கின்றோம்.

பல வருடங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்ற தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான போராட்டத்தின் காரணமாகத்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கிய அனைத்து பிரதான வேட்பாளர்களுக்கும், தொழிலற்ற பட்டதாரிகளுக்கும், டிப்ளோமாதாரிகளுக்கும் தொழில் வழங்க வேண்டும் என்ற வாக்குறுதி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 60,000 தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசியுங்கள் நாடு திறக்கப்படும்போது அமுலாகும் சுகாதார வழிகாட்டல் தீர்மானம் இதோ

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image