அங்கீகரிக்கப்பட்ட நியமனக் கடிதங்கள் எங்கே? பட்டதாரிகள் கேள்வி VIDEO
அங்கீகரிக்கப்பட்ட நியமனக் கடிதங்கள் எங்கே என மேன்முறையீடு செய்த பட்டதாரிகள் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளி பதிவுகளின் மூலம் இவ்வாறு பெற்ற பட்டதாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2019.12.28ஆம் திகதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்து தம்மைப் போன்ற பல பட்டதாரிகள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் வேலைவாய்ப்பு இன்றி இருப்பதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2021.03.22 ஆம் திகதி அமைச்சுக்கு தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து, மேல்முறையீட்டில் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.