வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூன்று வகுதிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தேடியறிந்து விரைவாக தீர்த்து வைப்பதற்கான கூகுள் படிவம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.