பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் 5,000 ரூபா வழங்க முடியாது?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் 5,000 ரூபா வழங்க முடியாது?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது என தொழில் அமைச்சர் தெளிவாக தெரிவித்திருக்கின்றார். நான் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திபிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் வழங்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தொழில் அமைச்சர் தெளிவாக தெரிவித்திருக்கின்றார். ஒரே நாடு, ஒரே தொழில் சட்டம் என்றால் அரசாங்கத்தினால் பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட தொழிலாளர்களும் இந்த நாட்டினுடைய பிரஜைகளே. நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களே அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் அதனைப் போன்றே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனியார் பிரிவில் தொழில் புரியும் உத்தியோகஸ்தர்களுக்கும் 5000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் இதுவே நியாயம். ஒரே நாடு ஒரே தொழில் சட்டம் என்றால் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் தனியார் துறைக்கும், உத்தரவு ஒன்றை பிறப்பித்தல் கட்டாயமானதாகும். பெருந்தோட்ட மலையக மக்களும் இந்நாட்டினுடைய பிரஜைகளே மேலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கைகட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதனை அரசாங்கத்திற்கு இந்த தருணத்தில் நான் ஆழமாக எடுத்துரைக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image