இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர்களுக்கான சம்பள முறையினை பிரிவெனாக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பள திருத்தத்தில் பிரிவெனாக்களில் கற்பிக்கும் ஆசிரியர் உள்வாங்கப்படவில்லை என்றும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உரிய தரப்பினருடனான கலந்துரையாடலின் போது பிரிவெனாக்களில் கற்ப்பிக்கும் ஆசிரியர்களையும் இச்சம்பள திருத்தத்திற்குள் உள்வாங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதற்கமைய, சமய பாடசாலை, பிரிவெனா, மற்றும் பிக்கு கல்வி அமைச்சினால் பிரிவெனா ஆசிரியர்களுக்கான சம்பளத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை அனுமதிக்கமைவாக பிரிவெனா ஆசிரியர்களின் சம்பளத்தை தயாரிப்பதற்கான அசை்சரவை கடிதமொன்று முன்வைக்கப்படவுள்ளது.
அக்கடிதத்திற்கான அனுமதி பெறபபட்ட பின்னர் பிரிவென ஆசிரியர்களின் சம்பளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி மாத நிலுவைச் சம்பளத்துடன் பெப்ரவரி மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்தது.