ஆசிரியர் உதவியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு அவசியம்

ஆசிரியர் உதவியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு அவசியம்

மலையக பாடசாலைகளில் பணியாற்றும்  ஆசிரியர் உதவியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு கல்விமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மலையக பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர்களாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சேவையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கும் அரசினால் சகல அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கக்கோரி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு முகம் கொடுக்க முடியாமல் இருக்கும் இவ் ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் இவர்கள் தற்போது 10000 ரூபா கொடுப்பனவில் பல சிக்கல்களுக்கு மத்தியில் சேவை புரிவதால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே ஆசிரியர் சேவைக்கு உருவாக்கப்படாமல் இருக்கும் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image