நிரந்தர நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கான சம்பளக் கட்டமைப்பு

நிரந்தர நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கான சம்பளக் கட்டமைப்பு
நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கான மாதாந்த சம்பள கட்டமைப்பு தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரிய ஆராய்ச்சி  விளக்கமளித்துள்ளார்.
 
இது தொடர்பில் காணொளி பதிவு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளதாவது,
 
51,500 பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு  நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் முதலாம் திகதியும்  நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ள பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
 
அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் மற்றும் பணியிடம் என்பன தொடர்பான நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை.  இது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
 
அரசவை அரச சேவையில் சம்பளம் தொடர்பில் 6/2006 சுற்றறிக்கை மற்றும் 3/2016 சுற்றறிக்கை என்பன தற்போது நடைமுறையில் உள்ளன.  அரச சேவையாளர்களுக்கான சம்பள வகுதிகளின் அடிப்படையில் எமது சேயைானது எம்.என்-4 என்ற சம்பளப் பிரிவுக்குள் அடங்குகிறது. எனவே ma4 என்ற பகுதிக்குள் உள்ளடங்குகின்ற அபிவருத்தி உத்தியோகத்தர்களின் ஆரம்ப சம்பளம் 31,490 ரூபா.  இந்த அடிப்படை சம்பளத்திற்கு இடைக்கால கொடுப்பனவாக 2,500 ரூபாவாகும். அத்துடன், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 2013ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் 7,800  ரூபா கொடுப்பனவு அதில் சேர்க்கப்படும். அத்துடன் அண்மையில் வாழ்க்கைச் செலவு போராட்டத்திற்காக ஆகக்குறைந்தது 10,000 ரூபாய் என்ற கொடுப்பனவில் 5,000 ரூபாய் கொடுக்கப்படுவதாக கூறினார்கள்.
 
எனவே, அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சம்பள கொடுப்பனவு இவ்வாறுதான் சேர்கின்றது.  அந்த ஐயாயிரம் ரூபாவை தவிர்த்தால் 42,790 ரூபாவாக இருக்கும்.  இதற்குள் 5,000 ரூபாவும் சேர்க்கப்பட்டால்தான் நிரந்தர அபிவிருத்தி  உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த சம்பளம் அமையும்.  இது தொடர்பில் நாங்கள் தலையீடு செய்வோம். - என்றார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image