மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ள ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்!

மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ள ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்!

​தொலைதூர ரயில் சேவை ஆரம்பிப்பது தொடர்பில்  ரயில் திணைக்களம்  ஒழுங்கான நடவடிக்கையை எடுக்காமைக்கு உட்பட பல விடயங்களை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஆசனங்கள் பதிவு செய்யப்பட்ட தொலை தூர ரயில்களை முன்னறிவித்தலின்றி ரத்து செய்தமை, ரயில் இயக்க ஊழியர்களை சரியான முறையில் முகாமை செய்யாமை, சாதாரண ரயில் சேவை அட்டவணையை செயற்படுத்தாமை, இராஜாங்க அமைச்சர் வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்தாமை ஆகிய பல்வேறு விடயங்களை முன்வைத்து இன்று (13) தொடக்கம் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு தொடக்கம் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தமது அனைத்து கடமை பொறுப்புக்களில் இருந்தும் விலகிக்கொள்ளவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image