வேலைத்தளத்தில் ஊழியர்களுக்கு அவசியமான அடிப்படை சட்ட விடயங்கள்

வேலைத்தளத்தில் ஊழியர்களுக்கு அவசியமான அடிப்படை சட்ட விடயங்கள்

இம்முறை வேலைத்தளம் சட்டப் பக்கத்தில், அன்றாடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக்கியமான சில அடிப்படை சட்ட விடயங்கள் தொடர்பில் இந்தக் கேள்வி பதில் பகுதி ஊடாக தெளிவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

பணியாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது, அடிப்படைச் சட்டச் சிக்கல்கள் பற்றி கருத்திற்கொள்வது மிகவும் முக்கியம் என்பதால்,  அது தொடர்பிலான கேள்விகளும், பதில்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.

01 கேள்வி

     தனியார் துறை பணியாளர் தொழில் பிணக்கு (தகராறு) ஒன்றுக்கு நிவாரணம் பெறக்கூடிய நீதித்துறை மற்றும் நீதித்துறை சாரா நிறுவனங்கள் யாவை?

பதில்:

       01. தொழிலாளர் நீதிமன்றம்

       02. இணக்க சபை (மத்தியஸ்த சபை)

       03. வர்த்தக நீதிமன்றம்

       04. தொழில் திணைக்களம்

       05. மேல்நீதிமன்றம்

       06. உயர் நீதிமன்றம்

 

02.  கேள்வி:

       அரசதுறை ஊழியர்கள் தங்கள் தொழில் உரிமைகள் மீறப்படும்போது எந்த நிறுவனங்களில் நிவாரணம் பெறலாம்?

பதில்:

      01. உயர் நீதிமன்றம்

      02. நிர்வாக விவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆணையாளர் என்கிற ஒம்புட்ஸ்மேன்

      03. மனித உரிமைகள் ஆணைக்குழு

      04.அரச சேவைகள் ஆணைக்குழு​

      05.மேன்முறையீட்டு தீர்ப்பாயங்கள்

03.  கேள்வி

       தொழில் பிணக்கு (தகராறு) சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் யாவை?

பதில்:

            01. பணியிட அமைதியை ஏற்படுத்தல்

            02. நல்ல தொழில்துறை உறவுகளைப் பேணுதல்

            03. தொழில் பிணக்குகள் ஏற்படுவதைத் தடுத்தல்

            04. தொழில் பிணக்குகளை விசாரித்தல்

            05. தொழில் பிணக்குகளுக்கு தீர்வு காணல்

04 கேள்வி :

                 தொழில் பிணக்கு சட்டத்தின் பிரகாரம் தொழில் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது?

பதில்:

            01. தொழிலாளர் ஆணையாளருக்கும்

            02. தொழிலாளர் அமைச்சருக்கும்

05 கேள்வி:

                 தொழில்துறை பிணக்கைத் தீர்ப்பதற்கு தொழிலாளர் ஆணையாளர் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் யாவை?

பதில்:

            01. இரு தரப்பினருக்கு இடையே எட்டப்பட்ட ஏதேனுமோர் உடன்படிக்கையின்படி பிரச்சினையைத் தீர்த்தல்

            02. சமரசம்

            03. சமரசம் மூலம் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியிடம் பரிந்துரைத்தல்

06 கேள்வி:

               தொழில் பிணக்கு தொடர்பாக தொழிலாளர் அமைச்சருக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன?

பதில்:

            ஏதேனுமோர் தொழில்துறை தகராறை ஒரு சிறிய தகராறு என்று தொழிலாளர் அமைச்சர் தீர்மானிக்கும் போது, ​ பிரச்சினைக்குரிய தரப்பினரின் ஒப்புதலின்றி,  அந்தப் பிரச்சினையை மத்தியஸ்தர் ஒருவருக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்ப அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.​

சிங்களத்தில் - வெடபிம

தமிழாக்கம் - பாரதி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image