ஊழியர்கள் பணிக்கொடை கொடுப்பனவுக்கு உரித்துடைவராவது எவ்வாறு?

ஊழியர்கள் பணிக்கொடை கொடுப்பனவுக்கு உரித்துடைவராவது எவ்வாறு?

1983 இன் 12 பணிக்கொடைச் சட்டம், தனியார் துறை மற்றும் கூட்டுத்தாபன துறை ஊழியர்களுள், 5 வருட தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்யும் ஒவ்வொரு பணியாளரும் சேவை முடிவுறுத்தப்பட்ட உடனேயே இந்தப் பலனைப் பெறலாம்.

சட்டத்தின்படி, பணியிடத்தில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகிறார்களா என்பதுதான் இந்த நன்மையைப் பெறுவதில் முதன்மையான விடயமாகும். ஆனால் இந்த நன்மை பின்வரும் சந்தர்ப்பங்களில் பணிக்கொடை செலுத்துவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பங்களாவன​

  1. ஒரு பணியிடமானது, 15 இற்கும் குறைவான பணியாளர்கள் உள்ள நிறுவனமாக இருக்கும்போது
  1. 05 ஆண்டுகள் நிறைவடையாத பணியாளர்கள்
  1. தனியார் சாரதிகள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள்
  1. கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் அதிக சாதகமான ஊதியம் பெறும் ஊழியர்கள்
  1. அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள்
  1. பங்களிப்பு நிதி செலுத்தாத ஏதேனும் ஓய்வூதியத் திட்டத்திற்கு உரித்துடைய ஊழியர்கள்

இந்த பணிக்கொடைத் தொகைகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதை ஒவ்வொரு பணியாளரும் புரிந்துகொள்வதை உறுதிசெய்வது பணியாளர் உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கிறது.

அதன்படி, ஒவ்வொரு பணியாளரும் ஒவ்வொரு ஆண்டும் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 1/2 மாத சம்பள​த்தை, சேவையாற்றிய தலா ஒவ்வொரு ஆண்டுக்கும் என குறித்த ஆண்டுகளுக்கு அமைய செலுத்த வேண்டும்.

உதாரணமாக, ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், கடைசியாக அவரது சம்பளம் ரூ.1 இலட்சமாக இருந்தால், அந்த ஊழியருக்கான பணிக்கொடையின் கணக்கீட்டை பின்வருமாறு காட்டலாம்.

சம்பளத்தின் அரை பங்கு 50,000 x 10 ஆண்டுகள் = 5 லட்சம்

சேவை முடிவுறுத்தப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இந்தப் பணிக்கடை தொகை செலுத்தப்பட வேண்டும்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த பணிக்கொடைத் தொகையை குறைக்கலாம் அல்லது மறுக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களாவன

  1. தொழில் தருநரின் நிதியை முறையற்றவாறு பயன்படுத்துதல்
  1. பண மோசடி செய்தல்
  1. தொழில் தருநரின் சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்துதல்

இதன்போது, பணியாளர் நிரபராதியாக இருந்தால் மற்றும் தொழில் தருநர் தீங்கிழைக்கும் வகையில் பணம் செலுத்தத் தவறினால், குறித்த தொழிலாளர் தொழிலாளர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை, ஊழியர் இறந்துவிட்டால், இறந்த பணியாளரின் சட்டப்பூர்வ வாரிசுகள் அந்த பணிக்கொடையைப் பெறலாம்.

மேலும், பணிக்கொடை வழங்குவதை புறக்கணித்தமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தொழிலாளர், தொழிலாளர் ஆணையாளரிடம் முறையிடலாம்.

இதன்போது பணிக்கொடை கொடுப்பனவு வழங்கப்படுவது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை தொழிலாளர் ஆணையாளர் உறுதிசெய்தால், செலுத்தத் தவறிய பணிக்கொடைத் தொகை அடங்கிய சான்றிதழை சம்பந்தப்பட்ட நீதவானிடம் சமர்ப்பிக்கலாம். அதனை சாட்சியாக ஏற்று, பணிக்கொடை செலுத்தப்படாத காலம் தொடர்பான தொகையைச் தாமத கொடுப்பனவுடன் செலுத்துமாறு தொழில் தருநருக்கு நீதவான்  உத்தரவிட முடியும்.

இந்த தாமத காலத்தின்படி செலுத்த வேண்டிய சதவீதம் கீழே காட்டப்பட்டுள்ளது.

  1. 1 மாதத்திற்கு மேற்படாத போது - 10%
  1. 3 மாதங்களுக்கு மேற்படாத போது - 15%
  1. 3 மாதங்கள் நிறைவடைந்த போதிலும், ஆனால் 6 மாதங்களுக்கு மேற்படாத போது - 20%
  1. 6 மாதங்கள் நிறைவடைந்த போதிலும், ஆனால் 12 மாதங்களுக்கு மேற்படாத போது - 25%
  1. 12 மாதங்களுக்கு மேற்படாத போது - 30%

எனவே, குறிப்பிட்ட சேவைக் காலத்தின் முடிவில் ஒவ்வொரு பணியாளரும் பெற வேண்டிய பணிக்கொடைத் தொகை எவ்வளவு? மேலும் சட்ட விலக்குகள் எவ்வளவு உள்ளன மற்றும் தாமதமாக பணம் செலுத்தப்பட்டால் கூடுதல் கொடுப்பனவு என்ன என்பதைப் புரிந்துகொள்வது தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அவசியமான அறிவாகும்.

மூலம் - wedabima.lk 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image