தொழிலாளர்களுக்கான நட்டஈடு எவ்வாறு கணிப்பிடப்படுகிறது என்பதை அறிவீர்களா?

தொழிலாளர்களுக்கான நட்டஈடு எவ்வாறு கணிப்பிடப்படுகிறது என்பதை அறிவீர்களா?

தொழிலாளர் ஒருவர் தமக்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை.

வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகம்

கண்ணோட்டம்

தொழில் புரிந்துகொண்டிருக்கும்போது நிகழ்கின்ற விபத்துக்களுக்கு முகம்கொடுக்கின்ற வேலையாட்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவை வழங்குவதற்காக 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வேலையாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட நிறுவனமாகும். சிவில் மற்றும் நீதவான் அதிகாரங்கள் உரித்தளிக்கப்பட்டுள்ள நட்டஈட்டு ஆணையாளரின் பிரதான பணி, 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வேலையாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டத்தை (இறுதியாகத் திருத்தப்பட்டவாறு) நிருவகிப்பதாகும். கூறப்பட்ட கட்டளைச்சட்டத்தின் குறிக்கோள், தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது நிகழ்கின்ற விபத்துகளினால் அல்லது ஈடுபடுகின்ற தொழில் காரணமாக காயமடைகின்ற அல்லது அத்தகைய காயத்தினால் இறக்கின்ற வேலையாளர்களுக்கு அல்லது அவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு நட்டஈட்டைச் செலுத்துவதற்கு தொழில்தருநரை ஊக்குவிப்பதாகும்.

தொலை நோக்கு

ஊறு அல்லது மரணம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பணியாளர்களுக்கான நட்டஈட்டை தொழில்தருநரால் விரைவாகச் செலுத்துவிப்பதன்மூலம் பணியாளர் திருப்தியைத் தோற்றுவித்தல்.

செயற்பணி

தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் காயம், மரணம் அல்லது நோய் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், வேலையாட்கள் அல்லது அவர்களில் தங்கியிருப்போர்களுக்காக விதித்துரைக்கப்பட்ட நட்டஈட்டை தொழில்தருநரைச் செலுத்தச் செய்வதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதும், அறிவுறுத்தல்களை வழங்குவதும்.

 

பணிகள்

  1. நட்டஈட்டு கோரல் தொடர்பில் நீதி விசாரணைகளை நடத்துதல்.
  2. நட்டஈட்டைச் செலுத்துவதற்கு அசட்டை செய்கின்ற அல்லது தவறுகின்றபோது கட்டளைகளை வலுவுள்ளதாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
  3. இறந்த வேலையாளின் பராயமடையாத தங்கியிருப்போர்களுக்கு உரித்துடைய நட்டஈட்டுப் பணத்தை அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்வரை தமது கட்டுக்கோப்பில் வைத்திருத்தல்.

 

நட்டஈடு

பணியாளருக்கானது (வேலையாள்)

 

"வேலையாள்" என்று கருதப்படுபவர் யார்?

 "வேலையாள்" என்பது ஒப்பந்தமானது வெளிப்படையானதாயினும்சரி அல்லது உட்கிடையானதாயினும்சரி ஏதேனும் தன்மையில் அவருடைய தொழிலின் அல்லது வியாபாரத்தின் நோக்கத்திற்காக தொழில்தருநர் ஒருவருடன் ஒப்பந்தத்தைச் செய்துள்ள அல்லது தொழில்தருநர் ஒருவரின் ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரிகின்ற எவரேனுமொரு ஆள் என்று பொருள்படும். பயிலுநர் நிலையிலிருப்போரும் இதற்குள் உள்ளடக்கப்படுகின்றனர்.

எனினும், ஆயுதப் படைகளின் உறுப்பினர் அல்லது பொலிஸ் படையின் உறுப்பினர் என்ற தன்மையில் பணிபுரிகின்ற ஆளொருவர் "வேலையாள்" என்ற வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படமாட்டார். ஆயினும், கூறப்பட்ட படைகளில் சிவில் நிலையில் பணி புரிபவர்கள் வேலையாட்களாகக் கருதப்படுகின்றனர்.

 

நட்டஈட்டுக்காக விண்ணப்பிப்பதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான தேவைப்பாடுகள் 

  1. விபத்தொன்று நிகழ்ந்திருத்தல் வேண்டும்
  2. அத்தகைய விபத்து தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
  3. மேலும், அத்தகைய விபத்து தொழிலில் ஈடுபட்டிருந்ததனால் ஏற்பட்டதாக இருத்தல் வேண்டும்.

 

நட்டஈட்டினைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் 

  1. விபத்தின் விளைவாக காயம் ஏற்பட்ட வேலையாள்
  2. விபத்தின் விளைவாக வேலையாள் மரணமடைந்தால் அவரில் தங்கியிருப்பவர்கள்.

 

நட்டஈட்டிற்காக விண்ணப்பித்தல் 

விபத்தினால் காயமேற்பட்ட வேலையாள் அல்லது விபத்தின் விளைவாக வேலையாள் மரணமடைந்தால் அவரில் தங்கியிருப்பவர்கள் விபத்து நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இதனகத்து பின்னர் வழங்கப்பட்டுள்ள படிவங்களைப் பயன்படுத்தி வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு கோரலொன்றைச் செய்தல் வேண்டும்.

மரணத்தை ஏற்படுத்தாத விபத்தின்போது "ஏ" படிவத்துடன் தகைமையுள்ள மருத்துவரின் மருத்துவச் சான்றிதழ். ("எஸ்" படிவம்)

மரணத்தை ஏற்படுத்தும் விபத்தின்போது "பி" படிவத்துடன் மரணச் சான்றிதழும் சமர்ப்பித்தல் வேண்டும்.

 

நட்டஈட்டைக் கணிப்பிடுதல்

வேலையாளரின் நட்டஈட்டைத் தீர்மானிக்கையில், மாத வேதனத்தின் விகிதம் மற்றும் இயலாமையின் அளவு அல்லது மட்டத்தின் அடிப்படையில் பின்வரும் அட்டவணையின்படி நட்டஈடு கணக்கிடப்படுகின்றது.

மாத சம்பளம்

 

Labour_Compantation.jpg


மரணம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள வேதனத்திற்கு நேராகத் தெரிவிக்கப்படுகின்ற நட்டஈட்டுப் பணம் ஆணையாளரினூடாகத் தங்கியிருப்பவர்களுக்கு செலுத்தப்படுகின்றது. ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வேதனத்திற்கு நேராகத் தெரிவிக்கப்படுகின்ற நட்டஈட்டுப் பணம் இயலாமையின் அளவிற்கு அமைவாக செலுத்தப்படுகின்றது. மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள தொகை 100% இயலாமைக்கானது. ஆகவே, உரிய தொகையானது, மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள இயலாமையின் அளவின்படி (விகிதம்) கணிக்கப்பட வேண்டியிருக்கின்றது. தற்காலிக இயலாமையின்போது மேலே (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வேதனத்திற்கு நேராகத் தெரிவிக்கப்படுகின்ற நட்டஈட்டுப் பணம், ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகளுக்கமைவாக இயலாமை முடிவுறும் வரை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் செலுத்தப்படும்.

 

நட்டஈடு தொழில் தருநர்களுக்காக

 

"தொழில்தருநர்" என்று கருதப்படுபவர் யார்?

"தொழில்தருநர்" என்பது இலங்கைக் குடியரசு மற்றும் கூட்டிணைக்கப்பட்டதாயினும்சரி அல்லது கூட்டிணைக்கப்படாததாயினும்சரி ஏதேனும் அமைப்பின் ஆட்கள் அத்துடன் தொழில்தருநரொருவரினதும் மரபுரிமையாளர்களினதும் எவரேனும் முகாமை முகவர் ஆகியோரை உள்ளடக்குகின்றது. இதன்படி, ஏனைய தொழிற் சட்டங்களைப் போலல்லாது வேலையாளர் நட்டஈட்டுச் சட்டத்தை அரச துறைப் பணியாளர்களுக்கும் பிரயோகிக்க முடியும்.

தொழில்தருநர் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கான அடிப்படைகள்

பணியாளர் ஒருவரின் (வேலையாள்) நட்டஈட்டுக் கோரலொன்றில் பின்வருகின்ற அடிப்படைகளின்பேரில் தொழில்தருநர் பொறுப்பலிருந்து விடுபடமுடியும்.

  1. மூன்று நாட்களை விஞ்சாத காலப்பகுதியொன்றினைக்கொண்ட வேலையாளின் இயலாமையை விளைவாக்குகின்ற ஏதேனும் காயம் தொடர்பில். உதாரணமாக சிறிய காயமொன்று. இது மருத்துவ அறிக்கைகளில் தங்கியிருக்கின்றது.
  2. விபத்தொன்றில் மரணம் ஏற்படாது, ஏற்பட்ட ஏதேனும் காயம் தொடர்பில் பின்வருவனவற்றிற்கு நேரடியாக உட்பட்டிருந்தால்.
    • வேலையாள் விபத்து ஏற்படும் நேரத்தில் குடி போதையில் (மதுபானம் அல்லது போதைப்பொருள்) இருந்திருத்தல்.
    • பாதுகாப்பு நோக்கத்திற்காக தொழில்தருநரினால் தெளிவாக வழங்கப்பட்டிருந்த கட்டளையொன்றிற்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமை.
    • பாதுகாப்பு நோக்கத்திற்காக தொழில்தருநரினால் வழங்கப்பட்டிருந்த ஏதேனும் பாதுகாப்பு அல்லது ஏனைய உபகரணங்களை வேண்டுமென்றே புறக்கணித்தல்.

விபத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்

மரணத்தை ஏற்படுத்தாத விபத்தொன்று ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அவ்விபத்தின் பொறுப்பை தொழில் தருநர் ஏற்றுக்கொண்டால், பணியாளருக்கு உரிய நட்டஈட்டுப் பணத்தைச் செலுத்தியதன் பின்னர், அந்த உடன்படிக்கைப் படிவத்தை ("ஜி" படிவம்) வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு அனுப்புதல் வேண்டும். வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அந்த உடன்படிக்கைப் படிவத்தை பதிவுசெய்வார். இது, சட்ட நடவடிக்கைகள் எடுப்பதனைத் தடுக்கின்றது.

தொழில்தருநர், சிறு விபத்துகள் (மூன்று (3) நாட்களுக்கு குறைவாக இருக்கின்றவை) தவிர்ந்த ஏனைய அனைத்து விபத்துகள் தொடர்பாக விபத்து ஏற்பட்டு 14 நாட்களுக்குள் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு அறிவித்தல் வேண்டும். இந்நோக்கத்திற்காக "கியு" படிவம் பயன்படுத்தப்படுதல் வேண்டும். வேலையாள் மரணமடைகின்ற சந்தர்ப்பத்தில், இது பற்றி 30 நாட்களுக்குள் "ஓ" படிவத்தின் மூலம் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறுவது, தொழில்தருநரை குற்றவாளியாகக் காண்பதனை விளைவாக்குவதுடன், அபராதம் செலுத்துவதற்கும் உட்படுத்தும். மரணம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், நட்டஈடானது, ஆணையாளரிடம் வைப்புச் செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன், மனைவிக்கோ அல்லது தங்கியிருப்போருக்கோ நேரடியாகச் செலுத்தப்படுதலாகாது. நட்டஈடு வைப்புச்செய்யப்படுகின்றபோது, தங்கியிருப்போருக்கிடையில் அதனைப் பங்கீடுசெய்வதற்கு ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார்.

தொழில்தருநரினால் பணியாளர்கள் (வேலையாட்கள்) காப்புறுதி செய்யப்படுதல்

இலங்கைச் சட்டத்தின்டி தொழில்தருநர்கள் தமது பணியாளர்களைக் காப்புறுதி செய்வது கட்டாயமல்ல. அவ்வாறு காப்புறுதி செய்யப்பட்டால், விபத்து ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், வேலையாட்களுக்கான நட்டஈட்டை அத்தகைய காப்புறுதியினூடகச் செலுத்தமுடியுமாகையால் நட்டஈட்டினைச் செலுத்துவது இலகுவாகின்றது. அவ்வாறு காப்புறுதி செய்யப்பட்டால், வேலையாளுக்குப் பொறுப்பான காப்புறுதிக்கான முழுக் காப்புறுதி உதவுதொகையும் தொழில்தருநரினால் செலுத்தப்படுதல் வேண்டும். 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image