பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் தொடர்பான வர்த்தமானி

பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் தொடர்பான வர்த்தமானி

பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

வெளிவிவகார அமைச்சரினால் கடந்த 27ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாசகம் 2 : இவ்வாசகம், தடுத்துவைத்தற் கட்டளையொன்றின்கீழ் ஆளொருவரைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கான கூட்டுமொத்தக் காலப்பகுதியை 18 மாதங்களிலிருந்து 12 மாதங்களுக்குக் குறைப்பதற்கென (இதனகத்துப்பின்னர் ''முதன்மைச் சட்டவாக்கம்'' எனக்
குறிப்பீடுசெய்யப்படும்) 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9 ஆம் பிரிவைத் திருத்துவதாகும்.

வாசகம் 3 : இவ்வாசகம், 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் ,லக்க, சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கெதிரான சமவாயச் சட்டத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட அளவுக்குச் சந்தேக நபர் பாதுகாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கென தடுத்துவைத்தற்கான இடத்துக்கு நீதிவான் செல்வதனை இயலச்செய்வதற்கு முதன்மைச் சட்டவாக்கத்தில் 9அ மற்றும் 9ஆ என்னும் புதிய பிரிவுகளை உட்புகுத்துவதாகும்.

வாசகம் 4 : இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவைத் திருத்துவதுடன் திருத்தப்பட்டவாறான பிரிவின் சட்டப்பயனானது அரசியலமைப்பின் 126 ஆம் அல்லது 140 ஆம் உறுப்புரையின்கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட பரிகாரமொன்றுக்காக விண்ணப்பிப்பதற்குத் தடுத்துவைக்கப்பட்டவர் ஒருவரை இயலச்செய்வதாகும்.

வாசகம் 5 : இவ்வாசகம், விளக்கமறியலில் இடப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட ஆளொருவருக்கான அணுக்கத்தைச் சட்டத்தரணியொருவர் கொண்டிருப்பதனை இயலச்செய்வதற்கும், அவ்வாறு விளக்கமறியலில் இடப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட ஆள் தனது உறவினர்களுடன் தொடர்புகொள்வதனை இயலச்செய்வதற்கும், முதன்மைச் சட்டவாக்கத்தில் 10அ என்னும் புதிய பிரிவை உட்புகுத்துவதாகும்.

வாசகம் 6 : இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் 11 ஆம் பிரிவைத் திருத்துவதுடன் திருத்தப்பட்டவாறான பிரிவின் சட்டப்பயனானது அச்சட்டவாக்கத்தின் 11 ஆம் பிரிவின்கீழான கட்டளையொன்று சேர்ப்பிக்கப்படுவதற்குமுன்னர் அத்தகைய ஆள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லையென்பதனை உறுதிப்படுத்துவதற்குச் சந்தேகநபரை ஒரு சட்ட-மருத்துவ அலுவலரின்முன்னர் நிறுத்துவதனை இயலச்செய்வதாகும்.

முழுமையான வர்த்தமானி அறிவித்தல் இங்கே

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image