அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் என்ன?

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் என்ன?

இவ்வுலகில் பிறந்து வாழும் ஒவ்வொரு மனிதனுக்கான மனித உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளை ஐ.நா மனித உரிமைகள் பிரகடனம் 1948ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று உறுதிப்படுத்தியது.

இப்பிரகடனமானது உலகளாவிய அனைத்து மக்களின் உரிமைகளின் பிரகடனமாகும். இதேவேளை, ஒவ்வொரு நாட்டிலும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் அந்நாட்டு குடிமக்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படை உரிமைகளாகும்.

1978 அரசியலமைப்பின் 3ம் பகுதியில் 10 - 17 வரையிலான உரிமைகள் நிறைவேற்று அல்லது நிருவாக செயற்பாடுகளினால் மீறப்பட முடியாதவை என்று கூறப்பட்டுள்ளது. அம்மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் வருமாறு,

பிரிவு 10 - ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திரமாக சிந்திக்கும்,  மனசாட்சி மற்றும் மத சுதந்திரம் உட்பட தாம் விரும்பும் சமயத்தை நம்புவதற்கும், பின்பற்றுவதற்கும் சுதந்திரம் உள்ளது.

பிரிவு 11 -  எந்தவொரு குடிமகனும் சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது.

பிரிவு 12 (1)- சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமமானவர்கள் மற்றும் சமமான பாதுகாப்பை அனுபவிக்க வேண்டும்.

பிரிவு 12 (2) - இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் போன்றவற்றின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது.

பிரிவு 13 (1) - எந்தவொரு நபரும் சட்டத்தினூடாக குறிப்பிடப்பட்டுள்ள முறைமைக்கு அப்பால் கைது செய்யப்படக்கூடாது. ஒருவர் கைது செய்யப்பட்டால், அதற்கான காரணத்தை அந்த நபரிடம் தெரிவிக்க வேண்டும்.

பிரிவு 13 (2) - கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும் அந்த இடத்திற்கு அருகிலுள்ள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும்.

பிரிவு 13 (3) - எந்தவொரு குற்றத்திற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் நேரில் ஆஜராகலாம் அல்லது வழக்கறிஞர் மூலம் நியாயமான விசாரணையைக் கோரலாம்.

பிரிவு 13 (4) - தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் தண்டனை இல்லாமல் எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை அல்லது வேறு எந்த தண்டனையும் விதிக்கப்படக்கூடாது.

பிரிவு 13 (5) - குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு நபரும் நிரபராதி என்றே கருதப்படுவார்.

பிரிவு 14 (1) - ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம்,  கருத்து கூறும் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம்

நிறுவன சுதந்திரம்

தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கும் அதில் பங்கேற்கவும் உரிமை

அதேபோல், 13 (5) (6), 14 (1) a இல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் தேசியப் பாதுகாப்பிற்காக வரையறுக்கப்பட்டவை என்று பிரிவு 15 கூறுகிறது.

பிரிவு 17 - அதிகாரம் 17 இன் விதிகளின் கீழ் நிர்வாக அல்லது நிர்வாக நடவடிக்கை மூலம் ஒரு நபரின் அடிப்படை உரிமைகளை மீறுதல் அல்லது உடனடி மீறல் தொடர்பாக பிரிவு 126 இன் படி உயர்நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு நபருக்கும் உரிமை உண்டு.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image