தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் என்றால் என்ன?

தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் என்றால் என்ன?

தொழிற்சாலை தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரியை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட சட்டமாக 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் எண் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.

இந்த சட்டமானது, சர்வதேச தரத்தின் அடிப்படையில் தொழிலாளர் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கல் என்பனவற்றுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பணியிடத்தில் ஊழியர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் திடீர் விபத்துகள் தொடர்பானவை மற்றும் தொழில் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் தொழிற்சாலைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதும், பணியிடத்தை மிகவும் பாதுகாப்பானதாக, சுகாதார தன்மைமிக்க இடமாக வைத்திருப்பது இந்த சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பணியாளர் மற்றும் தொழில் தருநர் ஆகிய இரு தரப்பினரதும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது இந்தச் சட்டத்தின் தனிச்சிறப்பாகும்.

இந்த தொழிற்சாலை கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி,  தொழிற்சாலையின் பௌதீக சூழல், இரசாயனப் பொருட்களை அகற்றுதல், இயந்திரங்களை மூடுதல், இயந்திரங்களை இயக்குவதற்கு தொழிலாளர்களை பணியமர்த்துதல், பொறியாளருக்கு  தொழில் தருநரின்  செய்யவேண்டிய விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் போது பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

பல தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது சுகாதாரம்  மற்றும் நலன்புரிக்காக போதிய அளவு வழங்களை​க் கொடுக்காத தொழிற்சாலைகள் இருப்பதாக புகார் கூறுகின்றனர்.  ஆனால் சில தொழிலாளர்களுக்கு அது தெரியாது. அதாவது, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பணியமர்த்தலானது, இந்தச் சட்டத்தின் பிரகாரம் பெண்களுக்கு தொழில் நிபந்தனைகள் செயல்படுத்தப்பட வேண்டும். அதாவது,

உணவு மற்றும் தேநீர் இடைவேளைக்கான நேரத்தைத் தவிர்த்து, வேலை நேரம் ஒரு நாளில் 09 மணிநேரம் அல்லது ஒரு வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்,

ஒரு பெண் அல்லது இளைஞன் உணவுக்காக குறைந்தபட்சம் 1/2 மணிநேரம் இடைவெளி இல்லாமல் 4 1/2 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image