சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிவாரணம் வழங்கும் நிகழ்வானது டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரையில் இடம்பெற்றது.
இந்நிவாரண நடவடிக்கையினூடாக கொழும்பு, ஹட்டன், லக்ஷபான ஆகிய பிரதேசங்களில் உள்ள வீட்டுப்பணிப்பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன் சங்கத்தின் அங்ககத்தவர்கள் 400 பேருக்கும் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன. 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், முகக்கவசங்கள், தொற்றுநீக்கித் திரவம் மற்றும் கையுறைகள் என்பன இதனூடாக வழங்கப்பட்டன.
அத்துடன், இத்தொற்று காலப்பகுதியில் வீட்டுப் பணியாளர்களின் நிலைமைத் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் தொழில்வழங்குநர்களின் நிலைமைத் தொடர்பிலும் கருத்துக்கள் தொடர்பிலும் கொழும்பில் கணிப்பீடு ஒன்று நடத்தப்பட்டது. இக்கணிப்பீட்டின் அறிக்கையை விரைவில் வௌியிட எதிர்பார்த்துள்ளதுடன் அதனை அடிப்படையாக கொண்டு வீட்டுப்பணியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், அவர்களின் உரிமைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சுமார் 9 மாத காலம் பெரும்பாலான வீட்டுப் பணிபெண்கள் தமது தொழிலை இழந்து பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாவும் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நாளை தினம் எவ்வாறு தேவைகளை பூர்த்தி செய்தவது என்பது குறித்து நிச்சயமற்ற தன்மையுடன் உள்ள ஆயிரக்கணக்கான வீட்டுப்பணியாளர்களுக்காக அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. முறைசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களான இவ்வீட்டுப் பணியாளர்களுக்கான உறுதியான திட்டமிடல் ஒன்றறை முன்னெடுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தொழில் திணைக்களம் மற்றும் அரசுடன் கலந்துரையாடவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்ப்ப மதுரங்க
ப்ரொடெக்ட் தொழிற்சங்கம்