கல்வியமைச்சின் முன்பாக போராடிய இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

கல்வியமைச்சின் முன்பாக போராடிய இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக கல்வியற் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் (17) போராட்டத்தை முன்னெடுத்தது.

நேற்று காலை 10 மணி அளவில் தாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப்  இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில்..

1. கல்வியற் கல்லூரி பயிற்சியை முடித்தவர்களுக்கு உரிய முறையில் ஆசிரியர் நியமனத்தை வழங்கு!
2. online முறையில் பாடசாலையை தெரிவு செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடு!
3. அரசின் இயலாமையால் கல்வியற் கல்லூரி நியமனம் 3500 இழுபறி நிலையில்.
4. பாடசாலைகள் எதிர்நோக்கும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்து வை.
4. கல்வியற் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை உடன் நிறுத்து!
6. அமைச்சரே கல்வி அமைச்சுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்க முடியாதா?
7. அமைச்சரே பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தேடி அறிய முடியாதா? போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க அவர்களின் தலைமையில் கல்வியற் கல்லூரி மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் கல்வி அமைச்சுக்கும் இலங்கை ஆசிரியர் சேவை சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையில் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கல்வி அமைச்சு முக்கிய கோரிக்கைகளுக்கு இணக்கத்தை தெரிவித்தது. உடன்பாடு மேற்கொண்ட விடயங்களாக

01பிரச்சினைகளுக்கு உள்ளான online விண்ணப்பதாரிகளை மீண்டும் submit செய்வதற்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல்.
02 ஆட்சேர்ப்பு அடிப்படையில் மற்றும் நிரந்தர வசிப்பிடத்திற்கு அமைவாக ஆராய்ந்து பார்த்து தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு அமைவாக உரிய பிரதேச செயலகப் பிரிவு அல்லது மாவட்டத்துக்கு உள்ளே,அப்படியும் இல்லையாயின் உரிய மாகாணத்துக்குள் மட்டும் நியமனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும்,
03 உங்களது திறமையின் அடிப்படையில் பெற்றுக் கொண்டுள்ள Rank ஐ அடிப்படையாகக் கொண்டு தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கும்,
04 தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு அமைவாக online முறைமூலம் அனுப்பமுடியாத டிப்ளோமாதாரிகளுக்கு விண்ணப்பப் படிவப் புகைப்படத்தை Email ஊடாக அனுப்பிய பின் உரிய பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவதற்கும்,
05 இறுதியாக நியமனத்தைப் பெற்றுக் கொடுக்கும் போது மேலும் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டது.

இந்த உடன்பாடுகளின் அடிப்படையில் கல்வி அமைச்சு உங்கள் நியமனத்தைப் பெற்றுத் தரும்வரை இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மிகுந்த அவதானத்துடன் உள்ளது. உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படின் 0777685038/0701057814 என்ற whatsapp இலக்கங்களூடாக CTSU NCOE 2016-2018 whatsapp குழுவிற்கு அனுப்பி வைக்குமாறும் மேலதிக தகவல்களுக்கு 0713280729 /0773080729 இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துமாறு சங்கத்தின் உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image