ஆசிரியர்களுக்கு 'ஒன்லைன்' கற்பித்தலுக்கான வசதிகளை அரசாங்கம் வழங்கவேண்டும்

ஆசிரியர்களுக்கு 'ஒன்லைன்' கற்பித்தலுக்கான வசதிகளை அரசாங்கம் வழங்கவேண்டும்

தற்போது நாட்டில் நிலவும் தொற்றுச்சூழலில் ஒன்லைன் ஊடாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தேவையான வசதிகளை ஆசிரியர்களுக்கு அரசாங்கம் வழங்கவேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

 தேவையான கருவிகள் இல்லாமல் பல ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் திருப்திகரமான சம்பளத்தை பெறுவதில்லை. டேட்டா வசதியுடன் தேவையான உபகரங்களை வாங்கி கற்பிக்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை. நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் வலையமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. மேலும் டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகம் என்பதுடன் போதியளவானதாக இல்லை.

இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுமார் 9 மாதங்களாக பாடசாலைகள் பூட்டிய நிலையில் உள்ளன. வசதிகள் உள்ள ஆசிரியர்கள் தமது சொந்த முயற்சியில் மாணவர்களுக்கு ஒன்லைன் ஊடாக பாடம் கற்பிக்கின்றனர். எனினும் வசதியில்லாத ஆசிரியர்களுக்கு தீர்வில்லை.

நாட்டில் கிழக்கு மாகாணத்தில் 30 வீதமானவர்களுக்கும் மேல் மாகாணத்தில் 50 வீதமானவர்களுக்கும் ஏனைய மாகாணங்களில் 20 - 40 வீதமானவர்களுக்கும் மட்டுமே இணைய வசதிகள் காணப்படுகின்றன. ஏனையவர்களுக்கு இல்லை

மேலும் ஒன்லைன் ஊடாக கற்றல் மாணவர்களுக்கு மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. மாணவர்கள் கையடக்க தொலைபேசி, கணனி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட உபகரணங்களுக்கு அடிமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image