அரச வைத்திய அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிட தீர்மானம்

அரச வைத்திய அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிட தீர்மானம்

நாளை (28) காலி மாவட்ட வைத்தியர்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் காலி மாவட்ட கிளை செயலாளர் டொக்டர் மஞ்சுள டி சொய்சா தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட பிரதி ஆளுநர் பவுஸ் நியாஸ் மாவட்டச் செயலக சுகாதார வைத்திய அதிகாரி பர்டம் டி சில்வாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை மாவட்டத்தில் அனைத்து வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமானது மாநகரசபையிலிருந்து வேறிடத்திற்கு மாற்றுவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்தமை மற்றும் நாளை (28) மாநகரசபையில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பது என மாநகர ஆளுநர் பிரியந்த சஹபந்து உறுதியளித்ததையடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் மஞ்சுள டி சொய்சா தெரிவித்தார்.

அதற்கமைய காலி மாநகர சபை சுகாதார அதிகாரிகள் காரியாலயம் இன்று (27) தொடக்கம் காலி தங்கெதர ரோயல் சிடி என்ற இடத்தில் இயங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் காலி கிளை செயலாளர் மஞ்சுள டி சொய்சா தொடர்ந்தும் கொவிட் 19 ஒழிப்பு நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image