வௌி மாகாணங்களில் உப கொத்தணிகள் உருவாகும் அபாயம்

வௌி மாகாணங்களில் உப கொத்தணிகள் உருவாகும் அபாயம்

பண்டிகைக் காலத்தில் பலர் மேல் மாகாணத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கு சென்றவர்களில் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டமையினால் பல உப கொத்தணிகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நேற்று, ஆங்கிலப் நாளிதழான டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வியில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேஷ் பாலசூரிய இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வடமேல் ஆகியவற்றில் கொவிட் 19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பண்டிகைக் காலப்பகுதில் மேல் மாகாணத்தில் இருந்து சென்றவர்கள். அவர்களில் சிலர் ஆரம்ப தொற்றாளர்கள்.

இதனால்தான் நாம் மேல் மாகாணத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து தடை விதிக்குமாறு கோரினோம். தற்போது வௌிமாகாணங்களில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும். அல்லது உப கொத்தணிகளை உருவாக்கும் இம்மாகாணங்களில் ஆங்காங்கே அண்டிஜன் பரிசோதனை செய்வதற்குப் பதிலாக பிசிஆர் பரிசோதனையை உடனடியாக அதிகரிக்குமாறு நாம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கிறோம். குறிப்பிட்ட அளவு மட்டுமே பிசிஆர் பரிசோதனைகளை செய்யாது அதிகளவில் செய்வதனூடாக நோயாளர்களை அடையாளங்காண முடியும்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் பிசிஆர் பரிசோதனையை அதிகரித்தனூடாகவே மேலதிக நோயாளர்களை கண்டறியக்கூடியதாக உள்ளது. நாம் இவ்வளவுதான் என்று குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே பரிசோதனை செய்யாது அதிக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா பிரயாணிகள் அதிகமாக இருந்தாலும் பிசிஆர் பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும்.

மேற்கு மாகாணத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை ஒரே அளவில் செல்கிறது. எனினும் கொவிட் 19 மூன்றாம் அலையை ஏற்படுத்துவதை தடுப்பதற்கு அதிக மக்கள் உள்ள பகுதிகளில் அதிகளவில் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 41,000 ஐத் தாண்டியது, புனானி சிகிச்சை மையத்தில் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளும், பிங்கிரியா சிகிச்சை மையத்தில் 500 க்கும் மேற்பட்டவர்களும், தம்பதெனிய சிகிச்சை மையத்தில் கிட்டத்தட்ட 300 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image