அட்டுலகம மக்களுக்கு சேவை வழங்குவது குறித்து தீர்க்கமான முடிவு அவசியம்
சுகாதார அதிகாரிகள் பண்டாரகம, அட்டுலகம பிரதேச மக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்குவது தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் ஒன்று எடுக்கவேண்டும் என்று அரச வைத்திய அதிகாரகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் கடமையில் இருந்து பொது சுகாதார பரிசோதகர் முகத்தி்ல் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் முகத்தில் உமிழ்ந்தமை தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் பேசவல்ல அதிகாரி வைத்தியர் ஹரித் அளுத்கே தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இதற்கு முன்னரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள குறித்த பிரதேச மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இவ்வாறான பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சேவை வழங்குவது சுகாதார அதிகாரிகளுக்கு பாதுகாப்பானதல்ல. எமது சுகாதார அதிகாரிகளை ஆபத்தில் தள்ள முடியாது. இத்தகைய செயற்பாடு கிராமத்தில் உள்ள அனைவரையும் ஆபத்திற்கு இட்டுச் செல்லும் செயலாகும்.
கிராமத்தில் உள்ள ஒருவரும் பொது சுகாதார பரிசோதகர்கள் அந்த நபர் கிராம தலைவர்கள் கூறியதையும் கேட்கவில்லை. மீது உமிழ்ந்த நபருக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. சுகாதார அதிகாரிகள் தமது சேவையை வழங்க மறுக்கும் பட்சத்தில் அட்டுலக பிரதேச மக்கள் ஒருவர் பின் ஒருவராய் வீடுகளில் இறக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்,
கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய நபரை சிகிச்சை நிலையத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் குறித்த நபர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.