மத்திய கிழக்கில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

புத்தாண்டில் தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் பொறியில் துறையில் ஆழமான அனுபவமுள்ள வௌிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் வரவேற்புள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள குறித்த துறைகளில் தகமையும் அனுபவமும் உள்ளவர்களுக்கு இது ஒரு நற்செய்தியாகும்.

பிறந்துள்ள 2021ம் ஆண்டில் பல தொழில் நன்மைகளுடன் தொழில்வாய்ப்பை வழங்க ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் காத்திருக்கின்றன. எனினும் தொழில் அனுபவமற்ற புதியவர்களை அனுபவம் மிக்கவர்களை இணைத்துக்கொள்வதிலேயே நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன.

அனைத்து துறைகளிலும் உள்ள நிறுவனங்களால் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தன்னியக்கவாக்கம் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தியதன் விளைவாக இந்த கோரிக்கை வந்துள்ளது என்கிறார் ஹேல்ஸ் கல்ப் ரீஜன் முகாமைத்துவ பணிப்பாளர கிறிஸ் கிறேவ்ஸ். தொற்று நோயை கவனத்திற்கொள்ளாது போட்டித்தன்மைக்கு முகங்கொடுப்பதற்கு மரபு தொழில்நுட்பத்துடன் செய்வதை விட நிறுவன பயன்பாடுகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் புதிய டிஜிட்டல் பயன்பாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

Author’s Posts