வெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன்று (20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கட்டார் நாட்டிலிருந்து 110 பேரும், சவூதியிலிருந்து 76 பேரும், இந்தியாவில் இருந்து 55 பேரும், மாலை தீவில் இருந்து 28 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாக கொவிட் - 19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அவர்களை அனைவரையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Author’s Posts