நாடுதிரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரையும் அரசாங்கத்தின்கீழ் முன்னெடுக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமான சேவைகளை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கவுள்ளதாகவும், நாடுதிரும்பும் அனைவரையும் அரசாங்கத்தின்கீழ் முன்னெடுக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, கட்டணம் செலுத்தி தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமல்ல எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளர்.
இதேவேளை, வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் காணப்படும் சிக்கலை நிவர்த்தி செய்வதற்கு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மேற்கொள்ளும் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.