நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி

நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி

இன்று (13) தொடக்கம் தினமும் புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கொவிட் 19 தடுப்புக்கான தேசிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் திட்டத்தின் கீழ் இவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

பணம் செலுத்தி மற்றும் செலுத்தாமல் நாட்டுக்கு வருவதற்கான சுமார் 66,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் பணிகள் துரிதப்படுத்தியுள்ளமையினால் வருவோரின் எண்ணிக்கைக்கமைவாக படையினரால் நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 72 மத்திய நிலையங்கள் இராணுவத்தினால் பராமரிக்கப்படுகிறது. அவற்றில் தங்கியிருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தில் இருந்து ஆறாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.-

இதேவேளை முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6267 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image