வௌிநாட்டு பணியாளர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம்

வௌிநாட்டு பணியாளர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம்

புலம்பெயர் தொழிலாளர்மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிநோக்கில் சென்று நாடு திரும்ப முடியாது பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவோர் குறித்து அரச கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

முற்போக்கான பெண்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ம் திகதி இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக இக்கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 60,000 இலங்கையர்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப வழியின்றி வெளிநாட்டில் தவிக்கின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் மத்திய கிழக்கில் பணிபுரியும் வீட்டுப் பணிப்பெண்களாக இருப்பதோடு பலர் தொழில்களை இழந்த நிலையில் நிர்க்கதியாகியுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தின் தொடர்பான மிகப்பெரிய சுமையைச் சுமக்கும் இவர்கள், இன்று பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கத்தின் மந்த கதியிலான முயற்சிகள் எந்த வகையிலும் போதுமானதாக இல்லை, மேலும் அரசின் செயற்பாடுகள், வக்கிரமான வணிகர்களின் மோசடிக்கும் வழி வகுத்துள்ளது.

வரலாற்றின் ஏனைய காலங்களைப் போலவே, இச் சந்தர்ப்பத்திலும், நெருக்கடிகளால் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. அதிலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது, ஆட்சியாளர்களின் திறமையின்மையால் வெளிநாடுகளில் கடுமையாக உழைக்கும் வீட்டுப் பணிப்பெண்களே.

வீட்டுப் பணிப்பெண்கள் உட்பட அனைத்து வெளிநாட்டுப் பணியாளர்களும் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவதற்கான உரிமைக்காக குரல்கொடுக்க எங்களுடன் இணையுங்கள்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image