இதேபோன்று சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் நேற்று (05) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக 10 மாதங்களுக்கு பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் வணிக சேவைகளுக்காக திறக்கப்படவுள்ளது.
ஜனவரி 23 ஆம் திகதியளவில் விமான நிலையங்களில் வணிக விமான பயணங்கள் முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார்.
சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக விமான நிலையங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை முன்னெடுப்பது இன்று, நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல என்று தெரிவித்த அமைச்சர், நாட்டின் சுற்றுலா துறையில் நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் 60 இலட்சம் பேர் நன்மை அடைகின்றனர். கொவிட் தொற்றின் காரணமாக இவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விமான சேவைகள் மற்றும் கைத்தொழில் ஏற்றுமதி தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் D.V ஸானக்க, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். ஹேட்டியாராச்சி, சுற்றுலா அபிவிருத்தி குழுவின் தலைவர் கிமாலி பெர்ணான்டோ, பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேரத்ன உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டனர்.
மூலம் - News.lk