இலங்கை உட்பட நாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ள ஜப்பான்
நாட்டின் எல்லை கொவிட் 19 பரவலில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஜப்பான் தனது நாட்டுக்குள் நுழைய 11 நாடுகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இன்று (14) தொடக்கம் இலங்கை உட்பட பல நாடுகள் ஜப்பானுக்குள் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை, தாய்வான். ஹொங்கொங், மின்மார், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், மலேசியா, வியட்னாம், சைனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் ஜப்பானுக்குள் நுழைய தற்காலிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் யொஷிடே சுகா தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட 11 நாடுகளில் வர்த்தகர்கள் ஜப்பானுக்குள் நுழைவதற்கு கடந்த வருடம் டிசம்பர் 28ம் திகதி தொடக்கம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை இம்மாதம் 31ம் திகதி வரை தொடரவுள்ள நிலையிலேயே மீண்டும் நாட்டின் எல்லைகளை ஜப்பான் மூடியுள்ளது.The