பல்வேறு நாடுகளிலிருந்து 594 இலங்கையர்கள் நேற்று வருகை
நேற்று (04) காலை 8.30 தொடக்கம் 24 மணி நேரத்திற் பல்வேறு நாடுகளில் இருந்து 594 இலங்கையர்கள் 9 விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுள்ளனர் என்று விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 6 விமானங்களல் 246 பேர் இலங்கையில் இருந்து வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக குவைத்தில் பணியாற்றி வேலையிழந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்த 376 பேர் நேற்று அதிகாலை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்களில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். விமானநிலையத்தை வந்தடைந்தவர்களுக்கு விமானநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தில் இலவசமாக பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதுடன் அரச தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று விமானநிலைய சேவைகளுக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் இலங்கை வந்த 218 பேருக்கு தனியார் வைத்தியசாலை அதிகாரிகளினால் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதுடன் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் இருந்த 90 பேரும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து 50 பேரும் சிங்கப்பூரில் இருந்து 41 பேரும் நாடு திரும்பியுள்ளனர்
இதேவேளை, டுபாய்க்கு 131 பேரும் கட்டாருக்கு 70 பேரும் இலங்கையில் இருந்து நேற்று சென்றனர் என்றும் விமானநிலைய சேவைகளுக்கான பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.