வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார்.
All Stories
பிரான்ஸில் சிறந்த 'பிரான்ஸ் பாண்' தயாரிப்பாளர் என்ற விருதை இலங்கையரொருவர் பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் அந்நாட்டு ஜனாதிபதிக்கு பான் தயாரித்து விநியோகிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
தன்னை வைத்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக பண மோசடி செய்த ஒருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொழில் நிமித்தம் குவைத் சென்று அந்நாட்டு சட்டவிதிகளை மீறிய 32 பெண்கள் இன்று மீண்டும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு தேசிய தொழில்பயிற்சி சான்றிதழ் NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் நேற்று (01) முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பணம் மூலம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் வழங்கப்படும் கால அவகாசம் 2023 ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழில் வாய்ப்புகளுக்காக இந்த வாரம் 155 இலங்கையர்கள் கொரியாவுக்கு பயணமாகவுள்ளனர்.
வௌிநாட்டு பணியாளர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.