பிரான்ஸின் சிறந்த பாண் தயாரிப்பாளராக தெரிவு செய்யப்பட்ட புலம்பெயர் இலங்கையர்!

பிரான்ஸின் சிறந்த பாண் தயாரிப்பாளராக தெரிவு செய்யப்பட்ட புலம்பெயர் இலங்கையர்!

பிரான்ஸில் சிறந்த 'பிரான்ஸ் பாண்' தயாரிப்பாளர் என்ற விருதை இலங்கையரொருவர் பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் அந்நாட்டு ஜனாதிபதிக்கு பான் தயாரித்து விநியோகிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

பிரான்ஸின் பாரம்பரிய பாண் வகையான பாகட் என்றழைக்கப்படும் பான் வகையை தயாரித்து தர்ஷன் செல்வராஜா எனப்படும் 37 வயது இலங்கையர் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

30வது வருடாக நடத்தப்பட்ட ‘Grand Prix de la Baguette de Traditional Francaise de la Ville De Paris’ எனப்படும் சிறந்த பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்களை தெரிவு செய்யும் போட்டியில் அவர் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு புலம்பெயர்ந்த தர்ஷன் இப்போட்டியில் 4000 யுரோ பணப்பரிசை பெற்றுக்கொண்டதுடன் ஒரு வருட காலத்திற்கு அந்நாட்டிற்கு பாகட் பாண் வகையை தயாரித்து வழங்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

15 பேரைக்கொண்ட தெரிவுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட தர்ஷனினால் தயாரிக்கப்பட்ட குறித்த வகை பாணை அவரைப் பற்றி சிறிதும் அறிந்திரரா 175 பேரினால் சுவைத்துப் பார்த்து மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வகைப் பாணைத் தயாரிக்க சிறந்த மா மற்றும் செய்முறையை பின்பற்றுவதாக பிரான்ஸ் 24 ஊடகத்தில் வழங்கிய செவ்வியில் தெரிவித்த தர்ஷன், தான் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டவுடன் அழுகை வந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸுக்கு புலம்பெயர்ந்த பின்னரே குறித்த பான்வகையை செய்ய தான் கற்றுக்கொண்டேன். என் வாழ்க்கையில் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நான் தயாரிக்கும் பாண் சுவையாக இருக்க காரணம் உள்ளது. அன்பாகவும் சந்தோஷமாகவும் சிரித்துக்கொண்டும் பாடிக்கொண்டுமே இப்பாணைத் தயாரிப்பேன் என்று அவர் AFP செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ மாவுக்கு 18 கிராம் உப்பு கலந்து 250 - 300 கிராம் நிறையுடன் கூடிய பாகட் பாணை அனைத்து பேக்கரி உரிமையாளரும் போட்டிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மாதிரி, செய்முறை, அமைப்பு, வாசனை மற்றும் சுவை போன்றன போட்டியின் போது கவனத்திற்கொள்ளப்பட்டது.

Bread2

Bread3

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image