அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா மற்றும் பிரான்ஸ ஆகிய நாடுகளுக்கிடையில் ஆட்கடத்தல் வியாபாரம் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டா தெரிவித்தார்.
உடல் உறுப்புகளைப் பெறுவதற்கு மக்களைப் பயன்படுத்துதல், வேலைவாய்ப்பைக் காட்டி சட்டவிரோத வேலைகளை வழங்குதல், பெண்களை விபச்சாரத்திற்குப் பயன்படுத்துதல் என மூன்று பகுதிகளாக மனித கடத்தல் நடைபெறுகிறது.
அவற்றுள் விபசாரத்தில் ஈடுபடுத்துவது மற்றும் கட்டாய வேலைக்கு உட்படுத்துவது போன்ற குற்றங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் உடல் உறுப்புகளைப் பெறுவதற்கு ஆட்களை பயன்படுத்திய குற்றங்கள் கடந்த காலங்களில் பதிவாகாவிட்டாலும், அண்மையில் சிறுநீரகம் பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகி தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சமரகோன் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் துபாய் மற்றும் ஓமனுக்கு பல விசாரணை குழுக்களை அனுப்பியுள்ளோம். அங்கு சுமார் 45 அறிக்கைகள் எடுக்கப்பட்டன. மனித கடத்தல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட 14 பேர் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழுக்கள் ஓமனுக்கு அனுப்பப்பட்டன. பாதிக்கப்பட்ட 19 பேரை முதல் குழு அடையாளம் கண்டுள்ளது. மேலும் சமீபத்தில் மற்றொரு குழு ஓமன் சென்றது. அங்கும் பாதிக்கப்பட்ட 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி - அருண