மருத்துவர் வேடத்தில் பணமோசடி - சந்தேகநபர் கைது!

மருத்துவர் வேடத்தில் பணமோசடி - சந்தேகநபர் கைது!

தன்னை வைத்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் வௌிநாட்டு ​வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக பண மோசடி செய்த ஒருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கொழும்பு பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது குறித்த நபரிடம் இதயத்துடிப்பை பரிசோதிக்கும் கருவி மற்றும் டொக்டர் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட ஆடை மற்றும் வைத்தியர்கள் பயன்படுத்தும் பல்வேறு நோய் தொடர்பான விபரங்கள் அடங்கிய புத்தகங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

வைத்தியர் போன்று உடையணிந்து மக்களை கவரும் வகையில் உரையாடும் குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் தனது மனைவின் அப்பிள் தோட்டம் ஒன்று இருப்பதாகவும் அதில் பணியாற்ற ஆட்கள் தேவையென்றும் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களை சேர்த்துக்கொள்ள முடிந்தாலும் எளியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் ஆவணங்களுக்கான பணத்தை மாத்திரம் செலுத்தினால் போதும் என்றும் கூறி நீண்டகாலமாக பணம் பறித்து வந்தார் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பணம் கொடுத்து ஏமாந்த நபர் ஒருவர் அவரை சந்திக்க வந்தபோது சந்தேகம் ஏற்பட பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கமைய உடனடியாக ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அருகில் பொரளை பொலிஸ் அதிகாரி சென்றபோது குறித்த நபர் தப்பிச் செல்ல முற்படுகையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இதேபோன்று ஒரு மாதத்திற்கு முதல் தேசிய வைத்தியசாலையில் வைத்து ஒரு நபரிடம் 75,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டார் என்றும் பின்னர் டொலர்களாக மாற்றித் தருமாறு கூறிவிட்டு தப்பிச் சென்றார் என்று வைத்தியசாலை பணிப்பாளர் பொரளை பொலியில் முறைப்பாடு செய்துள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் , மாரவில பிரதேசவாசியான 55 வயதான நபரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image