புலம்பெயர் தொழிலாளர்கள் 1.8 பில்லியன் டொலரை அனுப்பியுள்ளனர்

புலம்பெயர் தொழிலாளர்கள் 1.8 பில்லியன் டொலரை அனுப்பியுள்ளனர்
புலம்பெயர் தொழிலாளர்கள் நான்கு மாதங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 1867.2 மில்லியன் டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பியுள்ளதோடு , ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 454 மில்லியன் டொலர்களை அனுப்பபியுள்ளனர் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் இத்தொகையை ஒப்பிடும்போது இது 82.4 சதவீத அதிகரிப்பாகும்.
 
புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ,427.5 மில்லியன் டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது 68.8 சதவீத அதிகரிப்பாகும்.
 
இதேபோன்று பெப்ரவரி மாதத்தில் இவர்கள் அனுப்பிய 407.4 மில்லியன் டொலர்களை கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை 98.6 சதவீத அதிகரிப்பாகும்.
 
கடந்த மார்ச் மாதம், புலம்பெயர் தொழிலாளர்கள் 568.3 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 78.5 சதவீத வளர்ச்சியாகும்.
 
சட்ட ரீதியாக இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும், விமான நிலையத்தில் வழங்கப்படும் சுங்க வரிச்சலுகை நிவாரணத்தை அதிகரிப்பதற்கும் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image