குவைத்தில் சட்ட விதிகளை மீறிய 32 பேர் இலங்கை திரும்பினர்

குவைத்தில் சட்ட விதிகளை மீறிய 32 பேர் இலங்கை திரும்பினர்

​தொழில் நிமித்தம்  குவைத் சென்று அந்நாட்டு சட்டவிதிகளை மீறிய 32 பெண்கள் இன்று மீண்டும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பணிக்காக ஒப்பந்தம் செய்து சென்ற இடத்தில் பணியாற்றாமல் வேறு பிரதேசங்களில் பணியாற்றி வந்த அப்பெண்கள் சுய விருப்பத்துடன் அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தில் தம்மை பதிவு செய்தமையினால் அவர்கள் பாதுகாப்பாக நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


குவைத்துக்கான இலங்கை தூதரக அதிகாரிகள், அந்நாட்டு பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி குறித்து இலங்கையர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 30,000 பேர் வரை ஒப்பந்தம் செய்த தொழில் வழங்குநர்களிடமிருந்து வௌியேறி, வீஸா இன்றி பிற பிரதேசங்களில் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image