மின்சார வாகனத்தை இறக்குதி செய்வதற்கான காலம் நீடிப்பு

மின்சார வாகனத்தை இறக்குதி செய்வதற்கான காலம் நீடிப்பு

வெளிநாட்டுப் பணம் மூலம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் வழங்கப்படும் கால அவகாசம் 2023 ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 ஏற்கனவே, வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம தொடக்கம் 2022 டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் மின்சாரத்தில் இயங்கும் கார் மற்றும் மோட்டார் பைக்குகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அக்காலப்பகுதி ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் மறுபடி இந்த ஆண்டு 2023ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இறுதி வரையில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் பற்றாக்குறை போன்றவற்றை கருத்திற்கொண்டு சட்டரீதியான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயற்படுத்த, வாகனங்களை இறக்குமதி செய்ய சில அதிகாரிகள் எதிர்த்ததுடன் தாமதப்படுத்தினாலும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதியை வழங்கினார்கள்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை எரிசக்தி ஆதாரங்களை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தி, எதிர்காலத்தில் அரசுத் துறைக்கு மின்சார வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image