வௌிநாட்டு பணியாளர்களுக்கு தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பு
வௌிநாட்டு பணியாளர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐந்து கட்டங்களின் கீழ் இந்த வரிச் சலுகை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், 2400 முதல் 4799 டொலர் வரை நிதியை அனுப்பும் வௌிநாட்டு பணியாளர்களுக்கு 600 டொலர் மேலதிக தீர்வை வரி சலுகை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
4800 முதல் 7199 டொலர் வரை நிதியை அனுப்பி வைப்போருக்கு 960 டொலர் மேலதிக தீர்வை வரி சலுகை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.