கொரிய தொழில்வாய்ப்புக்கு 8,000 பேர் அனுப்பப்படவுள்ளனர்

கொரிய தொழில்வாய்ப்புக்கு 8,000 பேர் அனுப்பப்படவுள்ளனர்
கொரிய நாட்டில் தொழில் வாய்ப்புக்களுக்காக இந்த ஆண்டு 8,000 தொழிலாளர்கள் அனுப்பப்பட உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
 
கொரியாவிற்கு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தொழில்களுக்காக அனுப்பப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.
 
கடந்த ஆண்டு, 5,500 பேருக்கு கொரிய தொழில் வாய்ப்புக்கான கோட்டா கிடைத்திருந்த போதிலும் கிட்டத்தட்ட ஏழாயிரம் தொழிலாளர்களை கொரியாவுக்கு அனுப்ப முடிந்தது.
 
இவ்வருடம் 6,500 பேருக்கான தொழில் வாய்ப்புகான சந்தர்ப்பம் இருந்ததுடன், அண்மையில் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் இந்த நாட்டின் பணிப்பாளர் மற்றும் அமைச்சருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஒதுக்கீட்டை 8,000 ஆக அதிகரிக்க ஒப்புக்கொண்டனர்.
 
அதன்படி, அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் அனுப்பப்படும் ஆண்டாக இந்த ஆண்டு அமையவுள்ளது.
 
கொரிய நாட்டு தொழில் வாய்ப்புக்காக செல்லவுள்ள 140 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உத்தரவாதப் பத்திரங்களில் கையெழுத்திட்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image