இணையவழி மோசடிகளில் சிக்காமலிருக்க இவற்றை நீங்கள் பின்பற்றுகின்றீர்களா?

இணையவழி மோசடிகளில் சிக்காமலிருக்க இவற்றை நீங்கள் பின்பற்றுகின்றீர்களா?

இணையம் ஊடான நிதியியல் மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பு பெறும் வழிமுறைகள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

 

எவையேனும், அந்தரங்கத் தகவல்களை விசேடமாக பயன்பாட்டாளர் பெயர்கள், கடவுச்சொற்கள், பின் இலக்கம் எனப்படும் தனிப்பட்ட அடையாள இலக்கங்கள், ஒரு தடவை கடவுச்சொற்கள் அல்லது கணக்கு சரிபார்த்தலுக்குத் தேவையான எவையேனும் தகவல்களை எவரேனும் ஆளுடன் பகிரவேண்டாம்.

அத்துடன், பணம் கடன் வழங்குபவர்களுக்கு தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கான அணுகுவழிக்கு சம்மதிக்க வேண்டாம் என்றும் மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலொசனை வழங்கியுள்ளது.

மேலும், மத்திய வங்கியானது, தமது வங்கிகளிடமிருந்து அல்லது வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களிடமிருந்து, குறுந்தகவல் விழிப்பூட்டல்கள் போன்ற நிகழ்நேர அறிவிப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களைக் கோருவதுடன், இதன்மூலம் அவர்களது கணக்குகளைப் பயன்படுத்தி இடம்பெறுகின்ற ஏதேனும் மோசடியான செயற்பாடுகள் பற்றி அவர்கள் உடனடியாக அறியக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கான வழிமுறைகள் இதோ

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image