பட்டதாரி பயிலுநர்களை சேவையில் இணைத்தல் கட்டம் 11 இற்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி உரிய பிரதேச செயலகங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரிகளுக்கு பயிற்சி வழங்குதல் திட்டம் 2020 திட்டத்திற்கு அமைவாக பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுடைய பெயர் விபரங்கள் பொது சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ளது. அதில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பயிற்சிக்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அவரவர் பிரதேச செயலகங்களுக்கு வருகைத் தருமாறு கோரப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்பட்ட பட்டதாரிகள் பெப்ரவரி மாதம் 8ம திகதிக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்கப்படாவிடின் அவர்கள் நியமனத்தை நிராகரித்தவர்களாக கருதப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களின் கோரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறியின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.