சுகாதார அமைச்சருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

சுகாதார அமைச்சருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

முதலில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனையிலும், கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கொவிட்-19 தொற்றுறுதியான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image