பட்டதாரி பயிலுநர்கள் பணிக்கு சமுகமளிப்பதற்கான காலம் அறிவிப்பு

பட்டதாரி பயிலுநர்கள் பணிக்கு சமுகமளிப்பதற்கான காலம் அறிவிப்பு
வேலையற்ற பட்டதாரிகளுக்கு / டிப்ளமோதாரிகளுக்கு பயிலுநர் பயிற்சியளித்தல் 2020 நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டத்தின் ஊடாக 2021.02.21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதேச செயலகங்களில் பயிற்சிக்காக இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்களின்  பெயர்களைக் கொண்ட பட்டியல்கள் 2020.11.23, 2020.12.11, 2021.01.05 ஆம் திகதிய கடிதங்களின் ஊடாக அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 
அதற்கிணங்க அந்த பயிலுநர் பட்டதாரிகள் 2021.02.01 ஆம் திகதி உரிய பிரதேச செயலாளர்களிடம் பணிக்கு சமுகமளித்தல் வேண்டும்.
 
2021.02.08 ஆம் திகதி வரையில் பயிற்சிக்கு சமுகமளிக்காத உத்தியோகத்தர்கள் பயிலுநர் நியமனத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளார்கள் என கருதி நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் சமர்ப்பிக்கும் எந்த ஒரு காரணமும் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது  என அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
பயிற்சிக்கு அழைத்தல் வெறுமனே பட்டதாரிகள் டிப்ளமோதாரிகள் தபால் மூலம் இணைய வழியில் ஆவணங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் அவர்களின் ஆள் அடையாளமும் பரீட்சிக்கப்படும். அந்த தகைமைகளைப் பரீட்சிக்கும்போது தெரியவரும் விடயங்களின் அடிப்படையில் பயிற்சியை நிறுத்தி நியமனத்தை ரத்து செய்வதற்கு எனக்கு அனுப்பும் அதிகாரம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக  அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image