அழகியல் பாட பெறுபேறுகளின்றி கபொத சாதாரணதர பெறுபேறு வௌியிட்டால்...

அழகியல் பாட பெறுபேறுகளின்றி கபொத சாதாரணதர பெறுபேறு வௌியிட்டால்...

அழகியல் பாடங்களின் செயன்முறை பரீட்சை நடத்தாமல் க.பொ.த சாதாரண தர பரீட்சை (2020) பெறுபேறுகளை வௌியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுமார் 169000 மாணவர்கள் அழகியல் பரீட்சையில் தோற்றினர். அந்த பேறுபேறுகள் இன்றி பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவது என்பது மாணவர்களுக்கு இழைக்கும் பாரிய அநீதியாகும்.

அரசாங்கம் அவ்வாறான தீர்மானத்திற்கு வருமாகவிருந்தால் பெற்றோருடன் இணைந்து எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க பின்நிற்கப் போவதில்லை என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாத்திரம் பரீட்சை பெறுபேறுகள் வௌியிட தாமதமாகியுள்ளது என்று கூற முடியாது. கொரோனா காரணமாக தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டிருப்பது பிரதான காரணம் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image