பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான தகவல்

நாடுபூராகவுமுள்ள சகல பாடசாலைகளையும் திறப்பதற்கான வழிக்காட்டல் அறிக்கையை

தயாரித்து, நாளைய தினம் (13) கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிரிதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சு ஆகிய பிரிவைச் செர்ந்தவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலைகளை மீள திறப்பதற்கான ஆலோசனை அறிக்கை தயாரிக்கப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்துக்கமைய, நவம்பர் மாதத்துக்கு முன்னர் பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற கொரோனா கட்டுப்பட்டு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராம பாடசாலைகள், முதல்நிலை பாடசாலைகளை திற்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கொரோனா கட்டுப்பட்டு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை பாடசாலை மாணவர்களுக்கு சூம் தொழில்நுட்பத்தினூடாக கல்வி கற்பிப்பதால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக வைத்தியர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, 12 தொடக்கம் 18 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதை விரைவுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த வயது எல்லைக்கு உட்பட்ட 2 மில்லியன் சிறார்கள் இருப்பதாக இந்த கலந்துரையாடலின் போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

செயன்முறை பரிசோதனைகள் எதுவும் இதுவரையில் முன்னெடுக்கப்படாமையினால் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படுமென பரீட்சைகள் திணைக்களம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

செயன்முறை பரிசோதனைகள் இல்லாமல் பரீட்சை முடிவுகளை விரைவாக வெளியிடுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதுஎவ்வாறாயினும் நாடுபூராகவுமுள்ள சகல முன் பள்ளிகளையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - தமிழன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image