அரச சேவைகளில் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனத்தை விரைவாக வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கத்தின் பிரதம செயலாளர் சந்தன சூரியாராச்சி குறிப்பிட்டார்.
இம்மாதத்துடன் பயிற்சிக்காலம் நிறைவடைவதால்இ உடனடியாக நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்