2019ல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சி பட்டதாரிகளுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குமாறு ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
(25 மாதங்கள் நிரந்தரமில்லை)
2019 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையில் இணைக்கப்பட்ட பயிற்சி பட்டதாரிகளை உடனடியாக நிரந்தர நியமனத்தை வழங்கு
ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்
கிழக்கு மாகாணசபையை 2019 பட்டதாரி பயிலுனர்கள் சேர்க்கப்பட்ட பயனர்களை உடனடியாக நிரந்தரமாக்கு.
கிழக்கு மாகாண அரசே போலியான காரணங்களைக் கூறி எமது நியமனத்தை தாமதப்படுத்தாதே!
பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்று 25 மாதங்கள் முடிந்துவிட்டன...
என ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.