உள்நாட்டு இறைவரி திணைக்களம் உட்பட சுமார் இருபது அரச நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபா செலவில் நிறுவப்பட்ட தரவு கட்டமைப்புகள் தற்போது செயலிழந்த நிலையில் உள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
All Stories
நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி அரச பாடசாலை ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
தமது உறுப்பினர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினமும் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என கல்வி மற்றும் கல்விசாரா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் மூளைச் சலவைக்கு உள்ளாகும் வைத்தியர்களில் 25 சதவீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க இந்த வருடத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50% நிவாரணம் வழங்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று வலியுறுத்தினார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.