ஆசிரியர் நியமனங்களை வழங்குவது இலகுவான காரியமல்ல. பொருளாதார நெருக்கடி நிலையிலும் இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
All Stories
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் புதிய பரிணாமத்துடன் இன்று(04) முதல் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி வவுனியா மாவட்டத்தில் பல பாடசாலைகளிலும் பாடசாலை நேரத்தின் பின்னரும் அதிபர் ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றாேரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதலாவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சையில் தமிழ் மொழி வினாத்தாளில் சிங்கள மொழியில் தரவுகள் வழங்கப்பட்டமையால் பரீட்சார்த்திகள் சிரமங்களை எதிர் கொண்டதுடன், இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடனைத் திருப்பிச் செலுத்த 2028 வரை சலுகைக் காலம்.
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டசொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான திருத்த சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.