எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்குப் பிறகு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கு மாறும் நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ள நிலையில் கடவுச்சீட்டுக்களை பெறும் நடவடிக்கை தோல்வியடைந்துள்ளமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் உத்தியோகப்பூர்வமாக கடந்த வாரம் அறிவித்துள்ளதுடன் கடந்த ஜூலை மாதம் 16ம் திகதி புதிய விண்ணப்ப முறையினையும் முன்பதிவு முறையையும் திணைக்களம் அறிமுகப்படுத்தியிருந்தது. அதற்கமைய, பதிவு செய்த விண்ணப்பதாரிகள் மாத்திரமே திணைக்களத்திற்கு வருகைத் தர அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களினால் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவிருந்த இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் திணைக்களம் திட்டமிடாமை மற்றும் திட்டமிடல் சேவையுடன் கலந்துரையாடாமையும் தாமததிற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலத்திரனியில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கையை ஜனவரி மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தபோதிலும் கூட பழைய முறையின் கீழ் பாஸ்போர்ட்டுகளுக்கான கொள்முதல் செயல்முறையை திணைக்களம் ஆரம்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அத்துடன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்கும் நோக்கில் குறைந்த எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுக்களே அச்சிடப்பட்டுள்ளன. தற்போதைய கேள்வியை பூர்த்தி செய்வதற்கு குறைந்தது 500,000 கடவுச்சீட்டுக்கள் தேவைப்பட்டுள்ளதாகவும் தற்போது நடைமுறையில் உள்ள முறையின் கீழ் தினமும் 300 பாஸ்போர்ட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன, இந்நிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய கூட முடியாதுள்ளதாகவும் தினமும் 300 நிகழ்நிலை விண்ணப்ப பதிவிற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்த குறிப்பிடத்தக்க கால அளவு தேவை என்றும் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறையைத் ஆரம்பிக்காமல் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறையை முழுமையாக செயற்படுத்த முன்னரே விநியோகம் தீர்ந்துவிடும் அபாயம் காணப்படுகிறது. இ-பாஸ்போர்ட் அமைப்பு முழுமையாக செயல்படுவதற்கு முன்பே விநியோகம் தீர்ந்துவிடும் அபாயம் உள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக தினமும் திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் விண்ணப்பதாரிகள் காத்திருக்கின்றனர். முன்னுரிமைப்படுத்தப்பட்ட 50 விண்ணப்பங்களுக்கு விரைவாக கடவுச்சீட்டுக்களை வழங்க திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தமது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத சந்ததர்ப்பங்கள் சில விண்ணப்பதாரிகள் வன்முறையாக நடந்துகொள்ளும் நிலை காணப்படுவதாகவும் குடிவரவு குடிகல்வு திணைக்களம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை காரணமாக எதிர்வரும் இரு மாதங்களுக்கு கடவுச்சீட்டு வழங்கல் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஒக்டோபர் நடுப்பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் வருவதற்கு முன்பு பல தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன அதுவரை, தற்போதுள்ள இருப்பை, நிர்வகிக்க வேண்டும். அவசர தேவைக்கேற்ப கடவுச்சீட்டுக்களை வௌியிடும் நடவடிக்கை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. அச்சிட்ட கடவுச்சீட்டுக்களில் 30 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவை பாதுகாப்பு கருதி முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளும் செயற்பாடே காணப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.