நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பமாகிவுள்ளன.
All Stories
இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023 ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
60 வயது பூர்த்தியடையும் அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வுபெறுகின்ற நிலையில், அவர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைப்பது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.
அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்று (01) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..
2023ஆம் ஆண்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு 4,000 ரூபாவுக்கும் மேற்படாத விசேட முற்பணம் வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களினால் நிரப்பப்படும், வருகைதரல் மற்றும் வெளியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணைய வழியில் (Online) நிரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினம் நாட்டில் 60க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை 30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வுபெறவுள்ளனர்.
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நுகர்வோரின் மின் இணைப்பைத் துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபையின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில்லை என தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.